பட்டுக்கோட்டை ,அறந்தாங்கி வழியாக செல்லும் மயிலாடுதுறை - காரைக்குடி இடையே டெமு ரயிலுக்கு பதிலாக ரேக் வசதி கொண்ட ரயில் இயக்கம்

மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை ,அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை இயங்கி வரும் டெமு ரயிலுக்கு பதிலாக (ஜூலை 18ம் தேதி) முதல் ரேக் வசதி (பயணிகள் பொருட்கள் வைக்கும் ரேக்) கொண்ட விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரை அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்த பிறகு திருவாரூர்-காரைக்குடி வரை டெமு ரயில் சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவலால் அந்த ரயில்சேவைநிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஓய்ந்தபி றகு மீண்டும் திருவாரூர்-காரைக்குடி அதன்பிறகு மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையும் டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை பேராவூரணி-அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த டெமு ரயிலுக்கு‌ பதிலா (ஜூலை 18ம் தேதி) முதல் முன்பதிவில்லா ரேக் சேரிங் வசதி (பயணிகள் பொருட்கள் வைக்க ரேக்) கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் டெமு ரயிலைவிட கூடுதல் வசதிகளுடன் ரயில் பயணம் மேற்கொள்ள முடியும்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வாரந்தோறும் செங்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக் கோட்டை, திருத்துறைப்பூண்டி. திருவாரூர்,நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.

இந்த ரயில் வரும் செப்டம்பர் மாதம் வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் எர்ணாகுளம்-வேளாங் கண்ணி சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் உள்ள வரவேற்பை அடுத்து எர்ணா குளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும்,ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தாம்பரம்- செங்கோட்டை ரயிலை உடனே இயக்கவும், மயிலாடுதுறை-ராமேஸ்வரம் இடையேயும், தாம்பரம் காரைக்குடி  இடையேயும், திருவாரூர்-மதுரை இடையேயும் அறந்தாங்கி வழி யாக தினசரி ரயில்களாக இயக்க வேண்டும் என இப்பகுதி ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments