ஜெகதாப்பட்டினம் அருகே வெறி நாய் கடித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம்: தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை!

        மணமேல்குடி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வணேந்தல் கிராமத்தில் நேற்று காலை சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று 20க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் 15 க்கும் மேற்பட்ட ஆடுகளையும்மூன்று மாடுகளையும் கடித்துள்ளது, அதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணமேல்குடி தாலுகாவில் கடற்கரை பகுதியில் வீட்டு நாய்களை விட தெரு நாய்கள் முறையாக ரேபிஸ் தடுப்பு மருந்து செலுத்தாமல் ஆங்காங்கே சுற்றி தெரிவதால் பாதையில் நடந்து செல்லும் மாணவர்களும் அவ்வப்போது இதுபோன்று வெறி நாய்களால் கடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கோட்டைப்பட்டினம் பகுதியிலும் இதுபோல் தொல்லை அதிகமாக உள்ளது என்று சிபிஎம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் எனவே உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments