புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 40 ஆயிரத்து 871 பேர் எழுதினர் 6,808 பேர் தேர்வு எழுத வரவில்லை
குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 ஆயிரத்து 679 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்காக 161 இடங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையத்திற்கு வந்தனர். தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 40 ஆயிரத்து 871 பேர் எழுதினர். 6,808 பேர் தேர்வு எழுத வரவில்லை.


வீடியோ பதிவு

இத்தேர்வினை 186 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 59 சுற்றுக்குழு அலுவலர்களும், 25 பறக்கும் படை அலுவலர்களும், 186 ஆய்வு அலுவலர்களும் கண்காணித்தனர். இத்தேர்வு நிகழ்வுகளை 197 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைக்குழந்தைகளுடன் வந்த தேர்வர்கள் தங்களது குடும்பத்தினரிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். கைக்குழந்தைகளை தேர்வர்கள் வரும் வரை குடும் பத்தினர் கவனித்து கொண்டதை காணமுடிந்தது.

அன்னவாசல், ஆவுடையார்கோவில்

அன்னவாசல் பகுதியில் உள்ள மேட்டுசாலை, இலுப்பூர், வயலோகம், பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், ஆதனக்கோட்டை, ஆலங் குடியிலும் தேர்வு நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments