ரூ.750இல் இந்தியாவை ஒரு சுத்து சுத்த ஆசையா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிச்சா பாதி நாட்டை சுத்தின மாதிரிதான்!


இந்தியாவின் மிக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.


இம்முறை இந்தியாவின் மிக நீளமான வலையமைப்பைக் கொண்ட ஓர் ரயிலின் வழித்தடம் பற்றிய தகவலையே இன்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். தென் இந்தியா, வட-கிழக்கு இந்தியா என நாட்டின் மிக முக்கியமான ஒன்பது மாநிலங்களை இணைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

விவேக் எக்ஸ்பிரஸ் ஓர் நாட்டின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாகும். இது ஒட்டுமொத்தமாக 4,247 கிமீ தூரம் பயணிக்கின்றது. இத்தகைய நீண்ட தூர பயணத்தை நாட்டில் உள்ள வேறு எந்த ரயிலும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி தொடங்கி வட கிழக்கு இந்திய பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தின் திப்ருகர்ஹ் வரையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கின்றது.

இந்த ரயிலில் ஒரு முறை முழுமையாக பயணித்தால் இந்தியாவின் ஒரு பகுதியையே சுற்றி வந்த உணர்வு நமக்கு கிடைக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீஹார், நாகாலாந்து, அசாம் ஆகிய ஒன்பது மாநிலங்களையே விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ஒற்றை ரயில் இணைத்துக் கொண்டிருக்கின்றது.

நாகாலாந்து மற்றும் அசாம் ஆகியவற்றிற்கு சுற்றுலா செல்வோர் பெரும்பாலானோரின் விருப்பமான ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் இருக்கின்றது. ஒரு கூலான-ஹாயான நார்த்-ஈஸ்ட் சுற்றுலா ட்ரிப்பை மேற்கொள்ள நினைப்பவர்களின் முதன்மையான தேர்வாகும் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் காட்சியளிக்கின்றது.

2011 ஆம் ஆண்டே இந்த ரயில் முதல் முறையாக நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது. 2011-12 பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்ட ரயிலே இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ஆகும். சுவாமி விவேகானந்தா அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிற்காக இந்த ரயில் அர்பணிக்கப்பட்டது.

விவேக் எக்ஸ்பிரஸ், திப்ருகர்ஹ் - கன்னியாகுமரியைப் போல் இன்னும் மூன்று விதமான வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. தூத்துக்குடி - டூ - குஜராத்தின் ஓகா, மும்பையின் பந்த்ரா - டூ - கத்ரா, மேற்கு வங்கத்தின் ஹவுரா - டூ - கர்நாடகாவின் மங்களூரு ஆகிய வழித்தடங்களிலேயே விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

விவேக் எக்ஸ்பிரஸ்போல் இன்னும் பல ரயில்கள் இந்த உலகில் நீண்ட தூர இடைவெளியை இணைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏன், விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் எல்லாம் குழைந்த என கூறுமளவிற்கு மிக அதிக தூர பயணத்தை மிகக் குறுகிய காலை இடைவெளியில் கடக்கும் ரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில் உலகின் மிக நீண்ட தூர வழித்தடத்தைக் கொண்ட ரயிலாக ரஷ்யாவின் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் உள்ளது. 9,250 கிமீ, ஆறு நாட்கள் பயணம் என மிகப் பெரிய பின்புலத்தை இந்த ரயில் கொண்டிருக்கின்றது. ரஷ்யாவின் மாஸ்கோ தொடங்கி வ்ளாடிவோஸ்டோக் வழித்தடத்திலேயே இந்த ரயில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

விவேக் எக்ஸ்பிரஸின் ஒட்டுமொத்த பயண நேரம் 83 மணி நேரங்கள் ஆகும். நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், செங்கன்னுர், கோட்டயம், எர்னாகுளம், அலுவா, திருச்சூர், பாலாகாட், கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சமல்கோட், விசாகப்பட்டினம், விழியநகரம், ஸ்ரீகுளம், பிரஹ்மபூர், கோர்தா, புவனேஷ்வர், கட்டக், பாலசோர், கரக்பூர், அசன்சோல், துர்காபூர், பகுர், ராம்புர்ஹட், மல்டா, கிஷான்கன்ஞ், சிலிகுரி, அலிபுர்துவர், போங்கைகவோன், கவுகாத்தி, திமபுர், தின்சுகியா உள்ளிட்ட பகுதிகளையே இந்த ரயில் இணைத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான ரயில் சேவையையே 2020 மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ரயில்வேதுறை நிறுத்தியது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டு தொடங்கப்பட்டுள்ளது. தோராயமாக இந்த ரயில் வியாழன் அன்று மாலை 5.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறது என்றால், அந்த ரயில் ஞாயிற்று கிழமை இரவு 8.50 மணியளவில் திப்ருகர்ஹை சென்றடையும். இந்த ரயிலில் 2 சிட்டரில் பயணிக்க ரூ. 745 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

ரயில் பயணம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத பயண போக்குவரத்துகளில் ஒன்றாகி விட்டது. நீண்ட தூரம் செல்ல அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் விருப்பமான போக்குவரத்தாகவும் உள்ளது.
 
இதற்கு முக்கிய காரணம் கட்டணம் குறைவு. பாதுகாப்பான பயணம் என பல காரணங்களை சொல்லலாம். குறிப்பாக மற்ற போக்குவரத்து கட்டணங்களோடு ஒப்பிடும்போது ரயில் கட்டணம் மிக குறைவாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பலரின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவமாக ரயில் பயணங்கள் சில இருக்கலாம்.

நீண்டதூரம் செல்லும் ரயில்

என்றாவது யோசித்தத்து உண்டா? இந்தியாவில் மிக நீண்ட ரயில் போக்குவரத்து எது? இது எத்தனை மாநிலங்களுக்கு உள்ளாக செல்கிறது. இதில் கட்டணம் என்ன? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 4000 கிலோமீட்டர்களுக்கும் மேலாக, 9 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் ரயில் தான் இந்தியாவின் நீண்டதூரம் செல்லும் ரயிலாக உள்ளது. இந்த நீண்ட ரயில் ஆனது திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரையில் செல்லும் ஒரு ரயிலாகும். இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே நீண்ட வழிதடங்களில் ஒன்றாகும். வெவ்வெறு கால நிலைகள், நிலப்பரப்பு மற்றும் பல்வேறு மொழிகள், பல்வேறு மக்கள் என பலவற்றை இணைக்கிறது. மொத்தத்தில் இந்த ரயில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தினை ஒன்றினைக்கிறது.

என்ன எக்ஸ்பிரஸ்

தி விவேக் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது 4273 கிலோமீட்டர் பயணிக்கிறது. சுமார் 80 மணி நேரங்களுக்கு மேலாக செல்லும் இந்த ரயில், சுமார் 55 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. அசாம் முதல் தமிழகம் வரையில் செல்லும் இந்த ரயில், திரும்பவும் அதே பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

எப்போது தொடக்கம்

இந்த விவேக் எஸ்க்பிரஸ் ரயிலானது கடந்த 2011ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் நினைவாக அவரின் 150வது பிறந்த நாளில் தொடங்கப்பட்டது.. எனினும் கொரோனா காலத்தில் இந்த ரயில் சேவையானது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த பகுதியில் செல்கிறது?

டின்சுகியா, திமாபூர், குவஹாத்தி, போங்கைகான், அலிபுர்துவார், சிலிகுரி, கிஷங்கஞ்ச், மால்டா, ராம்பூர்ஹாட், பாகூர், துர்காபூர், அசன்சோல், காரக்பூர், பாலாசூர், கட்டாக், புவனேஷ்வர், கோர்தா, பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், சமல்கோட், ராஜமுந்திரி, ஏலூர், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, வேலூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் போன்ற ஸ்டேஷன்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்கே செல்கிறது.

ரஷ்யாவின் ரயில் பாதை இந்த ரயில் போன்றே ரஷ்யாவில் ஆறு நாட்கள் பயணம் செய்யும் நீண்ட ரயில் பாதை உள்ளது. இதன் மூலம் மாஸ்கோவில் பயணத்தை தொடங்கி, ஆறு நாட்கள் மற்றும் சுமார் 9250 கிலோ மீட்டார்கள் பிறகு விளாடிவோஸ்டோக்கை சென்றடைகிறது. இந்தியாவின் நீண்டதூரம் செல்லும் பாதையுடன் ஒப்பிடும்போது இது இருமடங்கு அதிகம்.

மிகப்பெரிய நெட்வொர்க் இந்திய ரயில்வேயானது 168 வருட வரலாற்றினையும், 1, 26,611 கிலோ மீட்டற்ற் நீளமுள்ள தடங்களையும் கொண்ட, உலகின் மிகப்பெரிய நெட்வொர்கினை கொண்ட ரயில் நிலையமாக இந்தியன் ரயில்வே உள்ளது. இது 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட்டுள்ளது. 2020 - 21ல் இருந்து இந்தியன் ரயில்வே தினமும் 3.43 மில்லியன் பயணிகளை ஏற்றி செல்கிறது.

எவ்வளவு கட்டணம் தெரியுமா? 

இன்றைய நிலவரப்படி, சாதரணமாக எந்த சலுகையும் சேர்க்கப்படாமல் 2A- second AC பிரிவில் ஜிஎஸ்டி, பதிவு கட்டணம் என எல்லாம் சேர்த்து, ஜெனரல் கோச்சில் சுமார் 4400 ரூபாய் ஆகும். இதே தட்கலில் பதிவு செய்யும்போது 4925 ரூபாயாகும். இதே 3A- second AC பிரிவில் ஜிஎஸ்டி, பதிவு கட்டணம் என எல்லாம் சேர்த்து, ஜெனரல் கோச்சில் சுமார் 3390 ரூபாய் ஆகும். இதே நார்மல் ஸ்லீப்பர் கட்டணம் 1355 ரூபாயாகும். 2S செகண்ட் சீட்டர் - சுமார் 745 ரூபாயாகும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments