மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க சாலைகளில் விபத்து பகுதி (Accident Zone) பலகை வைத்து தடுக்க வேண்டும்... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!




    மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்  அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க சாலைகளில்   விபத்து பகுதி (Accident Zone) பலகை வைத்து தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சில இடங்களில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க அந்த பகுதிகளில் விபத்து பகுதி (Accident Zone) பலகை, இணைப்பு சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில், கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன.
இந்த பிரிவுகளில் வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள், பிரிவு சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில், பயணம் செய்ய முற்படும் நிலையில், ஏராளமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை மீமிசல் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துக்கள் மூலம் ஏராளமானோர் காயம் அடைந்தும் மற்றும் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு கடற்கரை சாலையில் வெளியூர்களில் இருந்து செல்லும் வாகனங்கள் பொதுவாக 90 கி.மீ., முதல் 120 கி.மீ., வேகத்திற்கும் குறைவில்லாமல் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கிராம பிரிவு சாலைகளில் இருந்து கிழக்கு கடற்கரை மெயின் சாலையை கடக்க முற்படும் வாகனங்கள் தெரியாமல், விபத்துக்கள் ஏற்படுகின்றன. மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் உடனடியாக நிறுத்த முடியாத சூழல் உருவாவதால் கிழக்கு கடற்கரை கிராம இணைப்பு சாலை பகுதிகளில் விபத்துக்கள் தொடர்கின்றன. எனவே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், கிராம பிரிவு இணைப்பு சாலைகள் ,  உள்ளதை எளிதில் அறியும் வகையில், ஒளிரும் சமிக்கைகள் , விபத்து ஏற்படும் பகுதியில் விபத்து பகுதி (Accident Zone) பலகை அமைத்து ஏற்படுத்தி விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments