மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லீடு வகுப்பறைகள் மற்றும் வில்வித்தை பயிற்சி துவக்க விழா
அறந்தாங்கி அருகே மீமிசலில் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  லீடு வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் வில்வித்தை பயிற்சியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லீடு வகுப்பறைகள் மற்றும் வில்வித்தை பயிற்சி வகுப்புகளை பள்ளியின் தாளாளர் ராமசாமி தலைமையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் ஆவுடையார்கோவில் துணை சேர்மன் பிரியா குப்புராஜா, மீமிசல்  ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். இதில் கம்ப்யூட்டர் வகுப்பறைகளையும் வில்வித்தை பயிற்சி வகுப்புகளையும் துவக்கி வைத்து  சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.


நிகழ்ச்சியில் இந்தக் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பத்தாம் வகுப்பில் 400-க்கும் மேல் மதிப்பெண்  பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments