புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற "மக்கள் சங்கமம்" மாநாடு! - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
நமது தேசத்தின் '75' வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "மக்களாட்சியை பாதுகாப்போம்" (Save the Republic) என்ற முழக்கத்தோடு "ஜனவரி 26 முதல் ஆகஸ்ட் 15" வரை பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை தேசம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக "மக்கள் சங்கமம்" மாநாடு புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் 11.07.2022 திங்கள்கிழமை அன்று நடைபெற்றது.
மாநாட்டின் துவக்க நிகழ்வாக கொடியேற்றம் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நீல நட்சத்திரம் பொறித்த மூவர்ணக் கொடியை ECR பகுதி தலைவர் SRM ஷர்புதீன்அவர்கள் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து வரலாற்று கண்காட்சியை அம்மா பட்டினம் தெற்கு தெரு பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபுபக்கர் சித்திக் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 11.07.2022 திங்கள்கிழமை அன்று மாலை 06 மணியளவில் அம்மாபட்டினம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. ECR பகுதி தலைவர் SRM.சர்புதின் வரவேற்புரையாற்றினார்.
இம்மாநாட்டிற்கு அம்மா பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹீதீன், எஸ்.டி.பி.ஐ புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது, வர்த்தகர் அணி மாநில செயலாளர் SAM.அரபாத் மற்றும் அம்மாபட்டினம் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபுபக்கர் சித்திக் அவர்கள் துவக்க உரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜெ. முகமது ரசின், SDPI கட்சி மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக்,விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் தஸ்லிமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாநாட்டினுடைய தீர்மானத்தை சகோதரர் அபுல் கலாம் ஆசாத் வாசித்தார், பின்னர் ஓவியம், கைவினைதிறன், கட்டுரை,கவிதை ஆகிய போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 3000திற்க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் ECR நகர செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்கான் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் மாநாட்டின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது..
தீர்மானம் 01
இ சி ஆர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கக்கூடிய 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகையில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தங்களுடைய மேற்படிப்பினை பலதூர பயணம் சென்று கல்வி பயில உள்ளதால் குறிப்பாக மாணவிகளுக்கு அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் 02
இப்பகுதியில் பல்வேறு குக்கிராமங்களும், நகரங்களும் இருந்தும் தங்களுக்கு தேவையான அவசர சிகிச்சையோ, பெரு நோய்களுக்கான சிகிச்சையோ பெறுவதற்கு நெடுதூரம் சென்று பயணிக்க வேண்டிய உள்ளதால் ஈசிஆர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு பல்நோக்கு மருத்துவமனை மிக விரைவாக அமைத்து தர வேண்டும் என்று இந்த மாநாட்டில் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 03
ECR பகுதியில் தொடர்ந்து சில காலமாக இங்கு வசிக்கக்கூடிய இளைஞர்களுக்கு மத்தியில் புழங்கக்கூடிய வகையில் போதை வஸ்துக்களான கஞ்சா, போதை ஊசி போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு இளைஞர்கள் செல்வதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி போதை தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.