விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்திட மானியம்
தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஆழ்குழாய் கிணறுகளிலும், திறந்தவெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, இருக்கின்ற நீரினை கொண்டு, நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்திடவும், சாகுபடி செய்துள்ள பயிர்களிலிருந்து அதிக மகசூலை பெறவும் அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்ய வேண்டும். இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் பரப்பளவிலும், குறு விவசாயிகளுக்கு 2.50 ஏக்கர் பரப்பளவிலும் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைத்துதர விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த 100 சதவீத மானியம் தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு அதாவது 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. ஒரு பயனாளி குடும்பத்திற்கு அதிகபட்சமாக 12.5 ஏக்கர் அதாவது 5 எக்டேர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசு நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலமும், நீர் ஆதாரமும் உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்திட அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதள முகவரியில் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php  பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். நுண்ணீர் பாசன நிறுவனங்களை விவசாயிகள் தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments