பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்
பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் துறை சார்ந்த இயக்குனர்கள், மாவட்ட முதன்மை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கை விவரங்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஏற்பாடுகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு விவகாரம் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள குறைகளை ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்டு அறிந்து, அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

         மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை எந்தவித புகாருக்கும் இடமின்றி முறையாக நடத்தி முடிக்கவேண்டும்' என்று வலியுறுத்தினார். மேலும், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை என்றும், பள்ளிகளில் முககவசம் அணிவது உள்பட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இன்றும் (சனிக்கிழமை) ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments