தொண்டி அருகே உப்பூர் அனல் மின்நிலையத்திற்காக கடலில் அமைத்த துாண்களால் மீனவர்கள் பாதிப்பு


தொண்டி அருகே உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு கடலுக்குள் பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள துாண்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டி அருகே உப்பூரில் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின்நிலையம் 1,300 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 2014 முதல் பணிகள் நடக்கின்றன. திருச்சி, பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் இரும்பு மற்றும் ஸ்டீல் தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டு இங்கு குவிக்கப்பட்டுள்ளன.அனல் மின் நிலையத்திற்கு தேவையான நீரை கடலில் இருந்து கொண்டு வந்து மறு சுழற்சி செய்து மீண்டும் கடலுக்குள் விடும் வகையில் ராட்சத பைப்புகள் அமைப்பதற்காக கடலுக்குள் 6 கி.மீ.,க்கு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

3 கி.மீ., பணி நிறைவடைந்த நிலையில் மீதம் 3 கி.மீ., துாண்கள் அமைக்கப்பட்டதோடு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.செலவினம் அதிகாரிப்பு, ரயில் மூலம் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கு இறக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமான தளவாட பொருட்கள் கடந்த சில மாதங்களாக உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.இதனால் கடலுக்குள் பாலம் கட்டும் பணிகளும் ஆறு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டன. பாலம் பணி நிறுத்தப்பட்டதால் கடலுக்குள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பில்லர் துாண்களால் இரவில் மீனவர்கள் துாண்கள் தெரியாமல் விபத்திற்குள்ளாகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments