திருச்சிராப்பள்ளி வழியாக திருநெல்வேலி-தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

 திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

கீழ்க்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி-தாம்பரம் (வண்டி எண்:06004) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதிகளில் இயக்கப்படும்.

 மறுமார்க்கமாக தாம்பரம்-திருநெல்வேலி (06003) இடையே இரவு 10.20 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதிகளில் இயக்கப்படும்.
 விசாகப்பட்டினம்-பெங்களூரு(08543) இடையே மதியம் 3.55 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி, 14-ந்தேதி, 21-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந்தேதி, 25-ந்தேதிகளில் இயக்கப்படும்.

 மறுமார்க்கமாக பெங்களூரு-விசாகப்பட்டினம்(08544) இடையே மதியம் 2.50 மணிக்கும் புறப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி, 15-ந்தேதி, 22-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் 5-ந்தேதி, 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதிகளில் இயக்கப்படும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments