தாசில்தார் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்... அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்... கலெக்டர் கவிதாராமு தகவல்...



மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் அடையாள அட்டை வேண்டி இது நாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி 12-ந் தேதி கந்தர்வகோட்டையிலும், 13-ந் தேதி கறம்பக்குடியிலும், 14-ந் தேதி குளத்தூரிலும், 15-ந் தேதி இலுப்பூரிலும், 16-ந் தேதி புதுக்கோட்டையிலும், 19-ந் தேதி பொன்னமராவதியிலும், 20-ந் தேதி மணமேல்குடியிலும், 21-ந் தேதி திருமயத்திலும், 22-ந் தேதி அறந்தாங்கியிலும், 23-ந் தேதி ஆலங்குடியிலும், 26-ந் தேதி விராலிமலையிலும், 27-ந் தேதி ஆவுடையார்கோவிலும் நடைபெறவுள்ளது. 

ஏற்கனவே விண்ணப்பித்து இணையதளம் வாயிலாக நிலுவை, நிராகரிப்பு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெயர் பட்டியல் தங்கள் பகுதியில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தாசில்தார் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தாங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர் இருப்பின் மேற்காணும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில், மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை தெளிவாக அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் அசல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-1 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments