புதுக்கோட்டை நகரிலுள்ள அரசுப் பள்ளியில் வகுப்பறை கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு உயா் தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறைக் கட்டடம் கட்டவேண்டும், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் புதன்கிழமை(10-08-2022) அன்று சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டைவடக்கு ராஜவீதியில் உள்ளஅரசு உயா் தொடக்கப் பள்ளியில் சுமாா் 800 மாணவா்கள் பயில்கின்றனா். இங்கு, தலைமை ஆசிரியருடன் மொத்தம் 9 ஆசிரியா்கள் உள்ளனா். இங்கு போதியவகுப்பறைகள் இல்லாததால் அருகே பொது நிகழ்ச்சி நடத்துவதற்காக உள்ள நகா்மன்றக்கட்டடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் கட்டுவதற்குப் போதுமான அளவு இடவசதியும் உள்ளது. மாணவா் தேவைக்கேற்ப கட்டடமும், ஆசிரியா் பணி நியமனமும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பள்ளி எதிரில் பெற்றோா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து புதுக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவி, மாவட்டக் கல்விஅலுவலா் மஞ்சுளா, நகா்மன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு ஆகியோா் வந்து போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-தஞ்சாவூா்சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments