களமாவூர் ரெயில்வே கேட் மூடுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்




களமாவூர் ரெயில்வே கேட் மூடுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்


திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் களமாவூர் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலத்துக்கு அடியில் உள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடி சாலையின் இரு பக்கமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் செல்ல வழி இல்லாமல் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விராலிமலை வரை உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் ½ கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிவந்து மீண்டும் செல்ல வேண்டும். இதனைக் கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி களமாவூர் மேம்பால பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வருவாய் துறையினர் மற்றும் கீரனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments