தொண்டி: வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு குட்டிகள்.. மீனவர்களுக்கு விருது..




தொண்டி அருகே வலையில் அரிய வகை கடல் பசு குட்டிகள் சிக்கியுள்ளது. அதனைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு விருதும் பணப்பரிசும் இந்திய வன உயிரின நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
 
தொண்டி மீனவ சகோதரர்களின் வலையில் சிக்கிய கடல் பசு குட்டிகள்அந்த மீனவர்களால் கடல் பசு குட்டிகள் வலையில் இருந்து மீட்புதொண்டியை சேர்ந்த மீனவர் சகோதரர்களுக்கு விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மீனவர்கள் துளசிராமன் மற்றும் ஹரிஹரசுதன். சகோதரர்களான இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று தொண்டியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இவர்களின் வலையில் பெரிய அளவிலான இரண்டு மீன்கள் சிக்கியது தெரிய வந்தது. அது அரிய வகை கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றான கடல் பசு என்பதை பற்றி அறியாத அவர்கள் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து மீனவரான அவர்களின் தந்தைக்கு அனுப்பி விவரம் கேட்டுள்ளனர்.

அப்போது அவரது தந்தை அது ஒரு அறிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு என்றும் அவற்றை வலையிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை எடுத்து அவர்கள் வலையை அறுத்துவிட்டு அந்த இரண்டு கடல் பசு குட்டிகளையும் காப்பாற்றியுள்ளனர்.


கடல் பசு குட்டிகளை காப்பாற்றியதை செல்போன் மூலம் வீடியோவாகவும் பதிவிட்டு தொண்டியில் செயல்படும் இந்திய வன உயிரின நிறுவனத்தில் கடல்பசு பாதுகாப்பு திட்டக்குழுவிடனம் வழங்கினர்.

தொடர்ந்து கடல் பசுவைக் காப்பாற்றிய மீனவ சகோதரதர்களை அரசாங்கம் சார்பில் அங்கீகரிக்கும் வகையில், இந்திய வன உயிரின நிறுவனமும், வனத்துறையும் இணைந்து அவர்களுக்கு பதக்கத்தையும், தலா ரூ. 10,000 பரிசும், சான்றிதழ், கடல்பசு நினைவுப்பரிசு ஆகியவற்றை அறிவித்து கௌரஙப்படுத்தி அங்கீகரித்தது.

மேலும் நேற்று முன்தினம் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீனவர்கள் இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். வனத்துறை அலுவலகத்தில் மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் ஜகதீஷ் சுதாகர் பகான், மீனவர்களுக்கு பதக்கம், தலா ரூ. 10,000, கடல்பசு நினைவுப்பரிசு ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments