திருமயம் நகருக்குள் வராததை கண்டித்து தனியார் பஸ்களை மறித்து பொதுமக்கள் போராட்டம்

திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராததை கண்டித்து தனியார் பஸ்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பஸ்கள்

திருமயம் நகருக்குள் திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-திருச்சி ஆகிய தனியார் பஸ்கள் பகல் நேரங்களில் வந்து செல்கின்றன. ஆனால் மாலை நேரத்திற்கு பின்பு திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது. மேலும் திருமயம் நகருக்குள் வருவதற்காக பொதுமக்கள் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் பஸ்களில் ஏறினால் திருமயத்திற்குள் செல்லாது என பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

சாலை மறியல்

இதனை கண்டித்து திருமயம் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் நேற்று திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்த 2 தனியார் பஸ்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், தனியார் பஸ் டிரைவர்களிடம் கூறுகையில், மாலை நேரங்களில் புறவழிச் சாலையை பயன்படுத்தி அந்த வழியாக செல்வது போன்று, பகல் நேரத்திலும் திருமயம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர்கள் எப்போதும் திருமயத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து மறித்து வைத்து இருந்த 2 பஸ்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments