மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை; ரூ.45.84 கோடியில் அகலப்படுத்தும் பணி
சிவகங்கை--மதுரை ---- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை - திருப்புவனம் வரை ரூ.45.84 கோடியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை - சிவகங்கைவழியாக தொண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையை தேசியநெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவித்தது. சிவகங்கை ரயில்வே கேட்டை அகற்றி மேம்பாலம்கட்டுதல், முக்கிய ரோடுகளின் வளைவுகளை சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.

தற்போது இத்தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை முதல் திருப்புவனம் வரையிலான ரோட்டின் இருபுறமும் மேலும் அகலப்படுத்தும் பணி நடக்கிறது.சிவகங்கை போலீஸ் செக்போஸ்டில் இருந்து பைபாஸ் ரோடு, முத்துப்பட்டி போன்ற இடங்களில் ரோடு அகலப்படுத்தும் பணியாகரோட்டோர மண்ணை அகற்றி ரோடு அமைக்க சரி செய்து வருகின்றனர்.

இந்த ரோடு அகலப்படுத்தப்படும் பட்சத்தில் சிவகங்கை - பூவந்தி வரையிலான ரோட்டில் அதிக வாகனங்கள் சென்று வரலாம். பயண நேரமும் குறையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments