புதுக்கோட்டை கீழையூர் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுவதில் பிரச்சினைக்கு தீர்வு: கலெக்டர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொடிேயற்றினார்


புதுக்கோட்டை மாவட்டம், சேந்தாக்குடி ஊராட்சியின் தலைவராக இருப்பவர் தமிழரசன். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவின் போது தன்னை கொடியேற்ற விடாமல் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் தடுப்பதாகவும், இதேபோல் கடந்த சுதந்திர தின விழா அன்றும் கொடியேற்ற விடாமல் தடுத்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் சமூக வலைதளங்களில் பதிவிட் டிருந்தார். இதுதொடர்பாக தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த தகவல் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் தேசிய கொடிேயற்றினார். சேந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தன்னை பள்ளியில் கொடியேற்ற வைத்துள்ளது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments