ரயில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு .




        ரயில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது

அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயிலில் (16723) அக்டோபர் 19 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் திருநெல்வேலி - கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயிலில் (16724) அக்டோபர் 20 முதல் எஸ் 11 என்ற பெட்டி கொல்லம் - திருநெல்வேலி இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24 முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரயிலில் (16235) அக்டோபர் 28 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

மேலும் இந்த டிரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூபாய் 70, முன்பதிவு கட்டணம் ரூபாய் 145, டிரிசர்வ்டு கட்டணம் ரூபாய் 110 என வரையறுக்கப்பட்டுள்ளது.





இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

* கன்னியாகுமரி-புனே (வண்டி எண்: 16382) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி-எர்ணாகுளம் இடையே எஸ்-5 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (22638) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

எழும்பூர்-கொல்லம் (16723) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் நெல்லை-கொல்லம் இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* கொல்லம்-எழும்பூர் (16724) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி முதல் கொல்லம்-நெல்லை இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-மங்களூரு (22637) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் எம்.ஜி.ஆர் சென்டிரல்-சேலம் இடையே எஸ்-4 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* எழும்பூர்-ராமேசுவரம் (16851) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி முதல் மானாமதுரை-ராமேசுவரம் இடையேவும், ராமேசுவரம்-எழும்பூர் (16852) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் ராமேசுவரம்-மானாமதுரை இடையேவும் எஸ்-12, எஸ்-13 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

* எழும்பூர்-மங்களூரு (16159) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் திருச்சி-மங்களூரு இடையே எஸ்-10 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* மங்களூரு-எழும்பூர் (16160) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் மங்களூரு-திருச்சி இடையே எஸ்-7 பெட்டியும், மங்களூரு-கரூர் இடையே எஸ்-8, எஸ்-9, எஸ்-10 படுக்கை பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

* தூத்துக்குடி-மைசூரு (16235) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் தூத்துக்குடி-மதுரை இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments