புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பியாக வந்திதா பாண்டே பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 35க்கு மேற்பட்ட சட்டம்- ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது.

மேலும், 7 டிஎஸ்பி அலுவலகம் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் உள்ளது. போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போல் கஞ்சா உள்ளிட் போதை பொருட்கள் விற்பனை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடந்தால் உடனே பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காலம். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்கலாம் அல்லது மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவின் தொலைபேசி எண்ணான 94899-46674 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்காலம். மேலும், புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நகர் பகுதிகளில் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றி திரிந்தால் புகார் அளிக்கலாம். புகார் குறித்து தனிப்படைக்கு தகவல் தெரிவித்து, ரகசிய கண்காணிப்பு நடத்தி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை எஸ்பியின் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments