புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் வெள்ள தடுப்பு ஒத்திகை!புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) வெள்ள தடுப்பு நடவடிக்கையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்திகை நடைபெற உள்ளது.

அதன்படி புதுக்கோட்டை அசோக் நகர், அறந்தாங்கியில் காந்தி பூங்கா, ஆவுடையார்கோவில் பெரிய கடவாக்கோட்டை, கோட்டைப்பட்டினம், விராலிமலை அருகே பேராம்பூர் ஆகிய 5 இடங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட உள்ளது. மேலும் இது மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் என்பதால் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படும் தகவலை கேட்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments