சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்




சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை குறிப்பிட வேண்டும். 2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments