உடல்நிலை சரியில்லாத ஆதரவற்ற மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்த காவலர்




உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல் நிலைய காவலர் யாசர் அராபத்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80  வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மற்றும்  சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தங்கி இருந்தார்.    இந்நிலையில், வடகாடு காவல் நிலையத்தில் இருந்து இரவு நேர ரோந்து சென்ற காவலர் திரு. யாசர் அராபத் அவசர உதவி தேவைப்பட்டால் தன் னுடைய செல்போனுக்கு அழைக்குமாறு அந்த மூதாட்டியிடம் செல் போன் எண்ணை எழுதிக்கொடுத்து விட்டு சென்றுள்ளார் .

அதன்படி உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அந்த வழியே வந்த ஒருவரின் செல்போன் மூலம் வடகாடு காவல்நிலைய காவலருக்கு  மூதாட்டி தகவல் தெரிவித்த உடனே இத்தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று வடகாடு காவல் நிலைய காவலர் 446 திரு.யாசர் அராபத்  அவர்கள் ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆலங்குடி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று   சிகிச்சையளித்து, ஆதரவற்ற மூதாட்டியை  வல்லத்திராகோட்டை அருகே உள்ள முதியோர் இல்லத்தில்  பாதுகாப்பாக சேர்த்தார்.

ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய காவலரின் இச்செயலை பொது மக்கள் பலர் வெகுவாகப் பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments