பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (ஊரகம்) வீடு கட்டும் பணிகளை விரைவுப்படுத்த வெளி ஒப்பந்த அடிப்படை முறையில் பணிபுரியும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஜோஸ்பின் நிர்மலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி மற்றும் சுகாதாரம்) கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டும் வேலைகளை விரைவாக முடிக்கவும், துவங்கப்படாத நிலையில் உள்ள பணிகளை தொடங்கி முடிப்பதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி குமாரவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டு வசதி மற்றும் சுகாதாரம் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கண்ணன் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments