எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு




தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மேல்மருவத்தூர்-விழுப்புரம் (வண்டி எண்: 06725) இடையே காலை 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* விழுப்புரம்-மேல்மருவத்தூர் (06726) இடையே மதியம் 1.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* பாலக்காடு-திருச்செந்தூர் (16731) இடையே அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (புதன்கிழமை) திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்செந்தூர்-பாலக்காடு (16732) இடையே மதியம் 12.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று திருச்செந்தூர்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கலில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு புறப்படும்.

* பாலக்காடு-திருச்செந்தூர் (16731) இடையே அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கிழமை) மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்செந்தூர்-பாலக்காடு (16732) இடையே மதியம் 12.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்செந்தூர்-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு பாலக்காடு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments