அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்' தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை வழங்க திட்டமா?



‘நீட்’ தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் உள்பட தமிழக மாணவர்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர்.நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்று தேர்வு முடிவு வெளியான பிறகு கூறப்பட்டது. தேர்வை எதிர்கொண்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பெருமளவில் முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்பை முறைப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் ஏற்கனவே வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புடன், திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு தொழில்நுட்ப வசதிகளுடன் நீட் தேர்வுக்கான மேம்பட்ட பயிற்சியை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் தொடங்க இருப்பதாகவும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments