ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு!ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி கலந்தாய்வை தொடங்கி வைத்தார். இதில் எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம். வணிகவியல், எம்.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments