புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் 2-ந் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புமகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என அக்கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் பாவாணன், கலைவேந்தன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், அன்னவாசல், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய 9 இடங்களில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மேற்படி கட்சி அணிகள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் அமைப்புகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை திரட்டுவது எனவும், மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments