கீரமங்கலம் அரசு பள்ளிக்கு சமூக ஆர்வலர்கள் மூலம் நீட் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் கடந்த 2 வருடங்களில் 11 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதேபோல இந்த வருடமும் ஏராளமான மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது பள்ளியில் படிக்கும் போதே மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு தயாராகும் விதமாக திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவபாலன் தேவையான புத்தகங்களை வழங்கியுள்ளார். நேற்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் சமூக ஆர்வலர் சிகாலெனின் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த புத்தங்களை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஓய்வு நேரங்களில் படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments