சவுதி அரேபியா ரியாத்தில் தமுமுகவின் 28-ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - நடத்திய கருத்தரங்கம்






சவுதி அரேபியா ரியாத்தில் கடந்த செப்டம்பர் 02 , வெள்ளிக்கிழமை அன்று தமுமுகவின் 28-ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டுஇந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - ரியாத் மத்திய மண்டலம் சார்பில் தமுமுக கடந்து வந்த பாதையும் , எதிர்கால இலக்கும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் IWF மண்டல அலுவலகத்தில் நேரடியாகவும் , ஜூம் இணையதளம் (hybrid) வழியாகவும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு ரியாத் மண்டல தலைவரும் சவூதி மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளருமான மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்க, மண்டல & கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கம் மண்டல IPP துணைச் செயலாளர் மங்களகுடி அபுஹுரைரா அவர்கள் இறைவசனம் ஓத , பத்தாஹ் கிளை பொருளாளர் கோவை மன்சூர் அவர்கள் வரவேற்புரையாற்ற இனிதே துவங்கியது.





அதனைத் தொடர்ந்து மண்டல & கிளை நிர்வாகிகளான மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா மண்டல மமக இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக் நஸீம் கிளை தலைவர் லால்குடி ரஹ்மத்துல்லா,  மண்டல IPP துணைச் செயலாளர் மங்களகுடி அபுஹுரைரா மண்டல மக்கள் தொடர்பாளர் மங்களகுடி இக்ராமுல்லாஹ் மற்றும் சுலை கிளை தலைவர் RS மங்களம் சைஃபுல்லாஹ் ஆகியோர் தமுமுகவில் தங்களது பயணங்கள் & களப்பணிகள் குறித்தும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் கருத்துரையாற்றினார்கள்.

கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மமக பொதுச் செயலாளரும் &  மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது அவர்களை மண்டல செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லா அவர்கள் அறிமுகம் செய்து வைக்க, காணொளி வாயிலாக கால் நூற்றாண்டிற்கும் மேலாக செயல்பட்டு வரும் தமுமுகவின் வரலாற்று சாதனைகளையும் , களப்பணிகளையும் எடுத்து கூறி எதிர்கால இலக்குகள் குறித்தும் எதிர்கால சந்ததியினரை வழிநடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்று கூறி சிறப்புரையாற்றினார்.

மேலும் ரியாத் மண்டல தமுமுக செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லா அவர்கள் தமுமுகவின் சமுதாய சேவைகள் குறித்து எடுத்துரைத்து ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கமாக பற்றி கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கி கருத்துரையாற்றினார்.

🔹அதனைத் தொடர்ந்து ரியாத் மண்டல தமுமுக - மமக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் *தனது 15 வயது முதல் பயணித்த தமுமுகவின் கள அனுபவங்களை எடுத்து கூறி தமுமுகவின் வரலாற்று சாதனைகளில் ஒன்றான 3.5% இட ஒதுக்கீடை நமது இஸ்லாமிய மக்கள் முறையாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியனரை அரசியல் ஆளுமை மற்றும் அதிகார பலம் மிக்க சந்ததியனராக ஆக்குவதை நமது இலக்காக கொண்டு செயல்பட்டு ஈருலக வெற்றியை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறி சிறப்புரையாற்றினார்.

 இறுதியாக ரியாத் மண்டல மக்கள் தொடர்பாளர் மங்களக்குடி இக்ராமுல்லா அவர்கள் நன்றியுரையாற்ற துவாவுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.

கருத்தரங்கை ரியாத் மண்டல துணைச் செயலாளர் அரசை ஆசிக் இக்பால் அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கி தமுமுகவின் 27 ஆண்டு கால சேவைகளை கவிநடையுடன் எடுத்து கூறி சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கருத்தரங்க முழு காணொளியும் கீழ் உள்ள TMMK MEDIA முகநூல் லிங்கில் உள்ளது..


தகவல் :::

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
ஊடகப்பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments