ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடித நாள் கொண்டாட்டம்.!ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடித நாள் கொண்டாட்டப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடித நாள் கொண்டாட்டப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்துவிட்டது. கடிதம் எழுவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கடித நாள் கொண்டாடப்படுகிறது. இன்று (01-09-2022) ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் தங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி வரலாற்று முதுகலை ஆசிரியர் மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார். 

இந்நிழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் குமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments