கோட்டைப்பட்டினத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை

கோட்டைப்பட்டினத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பாக பேரிடர் காலங்களில் வெள்ள தடுப்பில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையை அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சொர்ணராஜ் தொடங்கி வைத்தார். பயிற்சியில் பல்வேறு துறையினரை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் மீட்பு மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை எவ்வாறு மீட்பது. கடலில் சிக்கி உள்ள மீனவர்களை எவ்வாறு மீட்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மருத்துவத்துறை சார்பாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மணமேல்குடி தாசில்தார் ராஜா, தனி தாசில்தார் ஷேக் அப்துல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி மற்றும் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், மின்சாரத்துறையினர், கால்நடை துறையினர், குடிநீர் வடிகால் வாரியத் துறையினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments