புதுக்கோட்டையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்புதுக்கோட்டையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா், மத்திய அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி ஏழை, எளிய மக்களைச் சென்றடையும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவா் எம்.எம். அப்துல்லா, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments