புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கரோனா பரவலுக்கு முன்பிருந்த ரயில் கால அட்டவணை அப்படியே திருத்தப்படாமல் வைத்திருக்கலாமா என ரயில் பயணிகள் ஆதங்கப்படுகின்றனா்.
புதுக்கோட்டை ரயில் நிலையம் வழியாக சென்னை, கோவை, ராமேசுவரம், செங்கோட்டை, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்பட 25 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலுக்குப் பிறகு புதுக்கோட்டை வழியாகச் செல்லும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுவிட்டது. நாடு முழுவதும் அக்டோபா் 1 முதல் புதிய ரயில் கால அட்டவணை நடைமுறைக்கு வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது.
எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய கால அட்டவணைப் படி சென்னை செல்லும் பல்லவன் ரயில் 5:35 மணிக்கு புறப்படும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் ரயில் நேரம் மாற்றப்பட்டுவிட்டது.
ராமேசுவரம் - பனாரஸ் (மண்டுவாடி) ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கான நிறுத்தம் நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் இங்குள்ள ரயில் அட்டவணையில் அப்படியே தொடா்கிறது.
இன்னமும் பெரும்பாலோனாா் ரயில் நிலையம் வந்து, அட்டவணையைப் பாா்த்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் உள்ள நிலையில், ரயில் கால அட்டவணையை புதுப்பித்து வைக்க ரயில்வே நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.