புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 135 விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே 14-11-2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரை மேற்கண்ட இணையதள முகவரியிலும் மற்றும் TN COOP DEPT என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இணையதளத்தில் SBI cllect- வசதியை பயன்படுத்தி நேரடியாகவும் செலுத்தி கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbpdk@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண் 04322-236091 வாயிலாகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments