அறந்தாங்கியில் காலை நேரத்தில் தொடர்ச்சியாக பஸ் இயக்க கோரிக்கை
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மாவட்ட தலைநகரான புதுக்கோட்டைக்கு சென்றால் தான் திருச்சி, அரியலூர், சென்னை உள்ளிட்ட வேறு மாவட்டங்களுக்கு செல்ல முடியும். இந்தநிலையில் அறந்தாங்கியில் இருந்து காலை 5.10 மணிக்கு புதுக்கோட்டைக்கு இடைநில்லா பஸ் இயக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 6.10 மணிக்கு குளிர்சாதன பஸ் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட 1 மணி நேரத்திற்கு (காலை 5.15 மணியில் இருந்து காலை 6 மணி வரை) பஸ் இயக்கப்படுவது இல்லை. இதன்காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது பண்டிகை காலம் முடிந்து ஊர் திரும்பும் பொதுமக்களுக்காக காலை நேரத்தில் தடையில்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ்களை அறந்தாங்கியில் காலை நேரத்தில் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments