சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதல்! கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பள்ளி தாளாளர் உயிரிழப்பு...

சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதல்! கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பள்ளி தாளாளர் உயிரிழப்பு...

சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் படுகாயம் 


தஞ்சை மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் அருகே மனோரா நோக்கி பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனமும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு மதுக்கூரில் இருந்து வடக்கமாபட்டிணத்தை நோக்கி சென்ற காரும்,பள்ளி குழந்தைகளை மனோரா சுற்றுலா தளத்திற்கு கிருஷ்ணாஜிப்பட்டிணம் அல் அன்வர் பள்ளியில் இருந்து அழைத்து செல்லும் வழியில் மனோரா வளைவில் இரண்டு வாகனமும், நேருக்கு நேர் மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் பள்ளி குழந்தைகளுக்குக்கும், ஆசிரியர்கள் காயம், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த செய்யது முஹம்மது  பள்ளி தாளாளர் பலத்த காயத்துடன் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments