மணமேல்குடி ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறுவளமையப் பயிற்சி நடைபெற்றது.
            புதுக்கோட்டை மாவட்டம்  முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட முதல் 10 ம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி குறுவளமைய அளவில் நடைபெற்றது. 

இப்ப பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி அவர்கள் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். 

தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்  ஆகிய படங்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

 பயிற்சியில் ஏதுவாளர்களாக இளங்கோவன் மாங்கனி சாமிநாதன் ரேகா கனிமொழி ஸ்ரீமதி தமிழரசி மற்றும் செந்தில் பாண்டி ஆகியோர் செயல்பட்டனர்.

 பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கையற்கண்ணி முத்துராமன் வேலுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments