மாடுகள் மீது மோதியதால் பழுதான மன்னார்குடி பயணிகள் ரெயில்




மாடுகளின் மீது மோதி மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் பழுதானதால் காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.


மாடுகளின் மீது மோதி மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் பழுதானதால் காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.

மாடுகள் மீது மோதியது

மன்னார்குடியில் இருந்து தினந்தோறும் காரைக்குடி வழியாக பகல் 11.55 மணிக்கு மானாமதுரைக்கு மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் செல்வது வழக்கம். அந்த ரெயில் மானாமதுரைக்கு மதியம் 1.15 மணிக்கு சென்று பின்னர் மீண்டும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 2.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு காரைக்குடி வழியாக மன்னார்குடியை சென்றடையும். இந்த ரெயிலில் ஏராளமான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மானாமதுரை, சிவகங்கை, கல்லல் பகுதியில் இருந்து ஏறி செல்வார்கள்.

வழக்கம் போல் இந்த ரெயில் நேற்றும் இந்த வழித்தடத்தில் மானாமதுரைக்கு சென்ற பின்னர் மீண்டும் மதியம் 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடி நோக்கி வந்தது. அப்போது கல்லல் அருகே பனங்குடி தண்டவாளத்தை கடக்க முயன்ற மாட்டின் மீதும், கல்லல் ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மற்றொரு மாட்டின் மீதும் ரெயில் என்ஜின் மோதியதால் ரெயிலின் வேகம் குறைந்தது. இதையடுத்து ரெயில் டிரைவர்கள் ரெயிலை நிறுத்தி சோதனை செய்தபோது ரெயிலில் பிரேக் பெயிலியர் ஆனது தெரிய வந்தது.

2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு

இதைத்தொடர்ந்து மெதுவாக சீரான வேகத்தில் பயணிகளுடன் ரெயிலை காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு இயக்கி வந்து முதல் பிளாட் பாரத்தில் நிறுத்தினர். அதன் பின்னர் பயணிகளை மாற்று வண்டியில் ஏற்றுவதற்காக ரெயில்வே அதிகாரிகள் முயற்சி செய்தனர். பின்னர் சுமார் 2 மணி நேரம் வரை பயணிகள் காத்திருந்து ராமேசுவரம்-திருச்சி ரெயிலில் மாலை 5.45 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த வண்டியில் 80 பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருச்சியில் இருந்து ரெயில்வே பொறியாளர்கள் வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments