மீன்கள் வளர்ப்பு திட்டத்தில் மானியம் விண்ணப்பிக்க நவம்பர் மாதம் 15-ந் தேதி கடைசி நாள்





பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் கூடிய 7 புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. உயிர் கூழ்ம திரள் குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் வெட்டுதல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும், புறக்கடை, கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் 2 அலகிற்கும், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், மீன் விற்பனை குளிரூட்டப்பட்ட வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் 1.5 எக்டேருக்கும், சிறிய அளவிலான உயிர் கூழ்ம திரள் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 அலகிற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments