இராமநாதபுரம் - கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து 2‌ இளைஞர்கள் பலி





இராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை அலவாய்க்கரைவாடி பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் ஜீவா (வயது 20), மாடசாமி மகன் மணி வேலன் (18), ரவி மகன் ரோசான் (18) ஆகிய 3 பேரும் நேற்று அக்டோபர் 24 கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது அந்த வழியாக ஒரு வேன், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர்  மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜீவா, மணி வேலன் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.




இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசான் மீட்கப்பட்டு அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து திருச்சி எம்.கே.கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் முகமது நிஷாருதீன் (29) என்பவரை கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments