ஆம்ப் ஆண்டௌரா (இமாச்சல பிரதேசம்) - புது தில்லி இடையே நாட்டின் 4-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்







இமாச்சல பிரதேசம் முதல் புது டெல்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 




மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிகவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் புதன் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். இமாச்சல பிரதேசத்தில் புதிய சேவை தொடங்கப்பட்டதன் மூலம், டெல்லி மற்றும் சண்டிகர் இடையேயான பயண நேரம் அடுத்த வாரம் முதல் மூன்று மணிநேரமாக குறைக்கப்படும். தேசிய தலைநகரில் இருந்து ஹிமாச்சலப் பிரதேசம் வரையிலான தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரம் ஆகும்.

இது வெறும் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த ரயிலின் அறிமுகம், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், வசதியான மற்றும் வேகமான பயண முறையை வழங்கவும் உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள மத ஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் உதவும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்வில் இமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







மேலும், இமாச்சல பிரதேசம் உனாவிலுள்ள ஐஐடியை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி மருத்துவ பூங்கா அமைப்பதற்கான அடிக்களும் நாட்டினார். அதாவது, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், உனா மாவட்டத்தில் உள்ள ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படும் மொத்த மருந்து பூங்காவின் அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டினார். இது இறக்குமதியைக் குறைத்து, முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து மாநிலப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments