ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!!ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முத்தனேந்தல் அருகே இன்று 4.10.2022 இரவு 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்த நிலையில் திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழந்த பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்கபட்டனர்.மேலும் ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேருந்தில் தொண்டியை சேர்ந்த நான்கு பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்தை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்கள் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments