திருச்சி ரயில்வே மண்டலத்தில் 5 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் இன்று (அக்டோபர் 04) முதல் உயர்வு


திருச்சி ரயில்வே மண்டலத்தில் 5 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் இன்று (அக்டோபர் 04) முதல் உயர்த்தப்பட்டுள்ளது

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரயில் நிலையங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள்.ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் ஒரு புறம் இருக்க உறவினர்களையும், நண்பர்களையும் வழியனுப்ப வந்தவர்கள் மற்றும் அவர்களை வரவேற்க வந்தவர்கள் என பயணிகள் அல்லாதோரின் கூட்டமும் அதிகமாக இருக்கும். எனவே பயணிகள் அல்லாதோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில்  நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டண உயர்வு அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடைமேடை கட்டணம் உயர்வு என்பது திருச்சி ரயில்வே கோட்டதிற்கு உட்பட்ட தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments