திருச்சி, திருப்பதி, கூடுர், நெல்லூர், குண்டூர் வழியாக மதுரை - காசிக்குடா (ஹைதராபாத்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தென் மத்திய ரயில்வே அறிவிப்பு






திருச்சி, திருப்பதி, கூடுர், நெல்லூர், குண்டூர் வழியாக மதுரை - காசிக்குடா (ஹைதராபாத்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது





தென் மத்திய ரெயில்வே சார்பில், பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து தெலுங்கானாவில் உள்ள கச்சக்குடா ரெயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. 

வண்டி எண் : 07191 காசிக்குடா -மதுரை

அதன்படி, காசிக்குடா-மதுரை வாராந்திர சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண். 07191) அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 26-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. 

காச்சிகுடாவில் இருந்து நவம்பர் 7, 14, 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 8:50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு 8:45 மணிக்கு மதுரையை வந்தடையும்.

வண்டி எண் : 07192 மதுரை  - காசிக்குடா 

மறுமார்க்கத்தில் மதுரை-கச்சக்குடா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.07192) அடுத்த மாதம் 9-ந் தேதியில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சக்குடா ரெயில் நிலையம் சென்றடைகிறது

அதேபோல, மதுரையில் இருந்து நவம்பர், 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ஆம் தேதிகளில் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை 7:05 மணிக்கு காச்சிகுடா சென்றடையும். 

இந்த ரயில் தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம் விழுப்புரம்,திருவண்ணாமலை, காட்பாடி,சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ் கிரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் அதிகமாக இருக்கும்




ஹஜூர் சாஹிப் நந்தீத் - எர்ணாகுளம் 

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், ஹஜூர் சாஹிப் நந்தீத்தில் இருந்து, நவம்பர் 4, 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23 மற்றும் 30ஆம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் இரவு 8:15 மணிக்கு, கேரள மாநிலம், எர்ணாகுளம் சென்றடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் டிசம்பர் 3, 10, 17, 24, 31ஆம் தேதிகளில் இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 7:30 மணிக்கு, ஹஜூர் சாஹிப் நந்தீத்துக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றுக்கான முன்பதிவு, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments