கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம், நெடுங்குளம் தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்..! மழைக்காக காத்திருக்கும் கோபாலப்பட்டிணம் மக்கள்!!




கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் மற்றும் நெடுங்குளம் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது .‌மழைக்காக கோபாலப்பட்டிணம் மக்கள் காத்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

காட்டுக்குளம் - நெடுங்குளம்

கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் நெடுங்குளத்தை மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடம் ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம்.

இந்நிலையில்  கடந்த சில நாட்களாக இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 

மழைக்காக காத்திருக்கும் கோபாலப்பட்டிணம் மக்கள்

கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 வருடங்களாக மழை காலத்தில் நல்ல பெய்தது. இதனால் குளங்கள் முழுவதும் நிரம்பின.

இந்த வருடம் மழை சரிவர பெய்யாத காரணத்தினால் நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்ப வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் மக்கள் காத்திருக்கின்றனர்.

சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சில நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் கோபாலப்பட்டிணத்தில் மழை இல்லாமல் இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இரண்டு குளங்களில் தண்ணீர் இல்லாததால் கோபாலப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.

எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளங்கள் நிறையும் என ஏக்கத்துடன் உள்ளனர்.

நெடுங்குளம் புகைப்படங்கள் 






காடுக்குளம் புகைப்படங்கள் 








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments