ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு சுவரோட்டி தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்!ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு சுவரோட்டி தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க  வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரோட்டி தயாரிக்கும் போட்டி ஆவுடையார்கோவில் வருவாய் துறை சார்பில் (தேர்தல் பிரிவு) கடந்த மாதம் நடைபெற்றது.இதில்வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று (25_11_2022) நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு முறையே ₹500,₹200,₹100  மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி தந்தார்கள்.உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களும் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments