இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது!ராமேஸ்வரத்திலிருந்து 14ம் தேதி காலை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி விரட்டி அடித்தனர். 3 விசைப்படகுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு இரவு முழுவது மீனவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 

பல மணி நேரத்திற்கு பிறகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். காயங்களுடன் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில் நேற்று (16-11-22) எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14 மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மீனவர்களின் விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments