புதுக்குடி மற்றும் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி!



மணமேல்குடி ஒன்றியத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி புதுக்குடி மற்றும் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி மற்றும் பொன்னகரம் ஆகிய இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணியினை புதுக்குடி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சகராஜ் மற்றும் பொன்னகரம் தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் சேர்த்தல் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வையும் பொதுமக்களிடையே இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல் போன்றவற்றை மக்களிடத்தில் எடுத்து செல்வதற்காக மாணவர்கள் மூலம் பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை கூறிக் கொண்டே கொண்டு வீதி வீதியாக, கடைத்தெரு வழியாக விழிப்புணர்வு ஆட்டோ மூலம் ஒலிப்பெருக்கி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்சாமி அங்கையற்கண்ணி ஆசிரியர்கள் ஜோக்கின் ராய், கிருஷ்ணன், செல்வகுமார், அனிலா தயாநிதி, பழனி, ராஜமாணிக்கம், சசிகுமார், விக்டர் கே.பி.சிங், தங்கராஜ், இயன் முறை மருத்துவர் செல்வகுமார் சிறப்பு பயிற்றுநர்கள் மணிமேகலை, கோவேந்தன், நதியா மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பவானி, பாகம்பிரியாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments