இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் வலையில் சிக்கிய புள்ளி திமிங்கலத்தை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.




ராமநாதபுரம் மாவட்டம், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், சுறா உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்குவதும், உயிரிழந்து கரை ஒதுங்குவதும் உண்டு.

இந்நிலையில் இராமநாதபுரம் அருகே அழகன்குளம் கடல் பகுதியில் கரை வலை மீன்பிடியில் அப்பகுதி மீனவர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய மீன் ஒன்று வலையில் சிக்கியிருப்பதை கண்டு, வலைக்கு அருகே சென்று பார்த்தபோது அது அரிய வகை புள்ளி திமிங்கலம் என்பது தெரிய வந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ எடையிலான அந்த மீனை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு வலையில் இருந்து விடுவித்தனர்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஒன்றிணைந்து மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீன் கடலுக்குள் சென்றது.

கரை ஒதுங்கிய மீனை குறிப்பிட்ட நேரத்தில் மீட்டு, கடலுக்குள் அனுப்பிவைத்த மீனவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

இது போன்ற மீன்கள் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால், நான்கு நாள்களாகத் தொடா்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், பாக் நீரிணை கடல் பகுதிக்கு வந்திருக்கலாம் என மீனவா்கள் தெரிவித்தனா்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments